விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கோபுர கலசம் திருட்டு!!!

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த மாதம் 6ம் தேதி விமர்சையாக கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் கோவில் சன்னதியில் உள்ள விருத்தாம்பிகை அம்மன் கோபுரத்தில் இருந்த தங்க முலாம் பூசிய கலசம் ஒன்று மர்ம நபர்களால் நேற்று முன்தினம் இரவு திருடப்பட்டுள்ளது. நேற்று காலை வழக்கம்போல கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலின்படி விருத்தாசலம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.