லஞ்சம் வாங்கி ஏழரையை அழைத்த விருதுநகர் எஸ்.ஐ!!!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். ஆதார் கொடுக்க ரூ.7 ஆயிரம் லஞ்சம். இந்த வழக்கு தொடர்பாக ராமராஜின் உறவினரான கண்ணன் என்பவரிடம் விசாரணை செய்து அவரது செல்போனையும் ஆதார் அட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.செல்போன் மற்றும் ஆதார் அட்டையை திருப்பி கொடுக்க அவர்கள் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். முதல் தவணையாக ரூ.7 ஆயிரம் கொடுப்பதாக கண்ணன் கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கண்ணன் இதுகுறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.