ரஷிய ஊடகங்களின் விளம்பர வருமானத்துக்கு கூகுள் தடை..!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில், ரஷியாவின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் பேஸ்புக்கில் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு பேஸ்புக் நிறுவனம் தற்காலிக தடை விதித்தது. அதை தொடர்ந்து, யூ-டியூப் நிறுவனமும் ரஷிய அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் தங்கள் வீடியோக்களில் விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானத்துக்கு தடை விதித்தது.

இந்த நிலையில் பேஸ்புக் மற்றும் யூ-டியூப்பை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ரஷியாவை சேர்ந்த ஊடகங்களின் விளம்பர வருமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
அதாவது, கூகுள் இணைய தளங்களிலும், கூகுளுக்கு சொந்தமான செயலிகள் உள்ளிட்டவற்றிலும் ரஷிய நாட்டின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பாபெட் அறிவித்துள்ளது.
கூகுள் இணையதளத்தில் யூ-டியூப்பில் அரசு மற்றும் தனியார் ஊடகங்களின் விடியோக்களுக்குள் இடம் பெறும் விளம்பரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன், ரஷிய ஊடகங்கள் விளம்பரங்களை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் மைக்கேல் அசிமென் தெரிவித்துள்ளார்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.