தமிழகத்திற்கு ‘ஆரஞ்ச் அலெர்ட்!!!
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், வரும், 3, 4ம் தேதிகளில், தமிழகத்தில் மிக கன மழை பெய்யும்’ என, வானிலை மையம், ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிவிப்பு: தென் கிழக்கு வங்க கடல் பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.இதனால், தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை மிதமான மழை பெய்யும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.