சதா சதா…சதா சுவாசத்தை நேசிப்போமாக….

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் சதா.. சதா ஒரு இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்…
அதாவது நாம் அறிந்தும் அறியாமலும் அந்த இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இயக்கத்தின் பெயர் என்ன என்று ஒருவரிடம் கேட்டு விட்டால் அவரால் உடனே பதில் சொல்லிவிட முடியாத இயக்கம் தான் அது…
அதுதான் சதா சதா இயங்கும் சுவாசம் அல்லது மூச்சு எனும் உயிரி இயக்கம் இயற்கையின் இனிய படைப்பில் உருவான ஓர் உயிர் தாவரம் முதல் ஆறு அறிவு படைத்த மனித இனம் வரை சதா சதா சுவாசத்தின் அடிப்படையிலேயே தான் உயிர்ப்பித்து வாழ்கிறது என்கின்ற அடிப்படை உண்மைத்தன்மையை அனைவரும் அறிந்ததே ஆனால் அந்த நிகழ்வை தான் அனைவரும் மறந்து வாழ்கிறோம்… சுவாசிப்போம்.. சுவாசி…. சுவாசி என்று சுவாசத்தை நேசிப்போம்.
சுவாசத்தின் மகிமை நிறைந்த மகா பேராற்றல் பெற்ற இரவு தான் மகா சுவா(ச) ராத்திரி எனும் மஹாசிவராத்திரி “லூமினிபெரஸ் ஈதர்” ( Luminiferous Eather ) எனப்படும் பிரம்மாண்டமான பிராண உயிர் சக்தி இன்று(மார்ச் 1ஆம் தேதி)இரவு பேரளவில் புவி மண்டலத்தை வலம் வருகிறது என்பது அறிவியல் உண்மை அந்த நேரத்தில் ஆற்றல்மிக்க அந்த சக்தியை நுகர்வதற்கு நாம் தயாராக இருப்பது சிறப்பு இது ஆரோக்கிய ரீதியான உண்மை
மகா சுவாசராத்திரி அல்லது மகா சிவராத்திரியன்று நாம் நிமிர்ந்து உட்கார்ந்து நமது சுவாசத்தை மட்டும் கவனித்து நேசித்து சுவாசித்தால் பல அரிய ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கண்டிப்பாக ஏற்படும் என்பது நமது சித்தர் பெருமக்களின் அசைக்க முடியாத அறிவியல் கருத்து ஏன் நாம் நிமிர்ந்து உட்கார வேண்டும் என்று சில பகுத்தறிவாதிகள் கேட்பார்கள் அவர்களுக்கான பதில் என்னவென்றால் ஒவ்வொரு மனித உடம்பின் தூண் அதாவது மனிதர்கள் நிமிர்ந்து நடப்பதற்கான எலும்புகளின் அடுக்கு
நாம் பிறக்கும்போதே முதுகெலும்பு நல்ல வளர்ச்சி கண்டிருக்கும். அப்போது முதுகெலும்பில் 33 தனிப்பட்ட எலும்புகள் காணப்படும். இந்த 33 எலும்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும். பெரியவர்களாக முதிர்ச்சி அடைந்ததும் 26 எலும்புகளாக மாறிவிடும் . மனித உடலில் முதுகுத் தண்டுவடம் என்பது அடிப்படையில் ஒரு ரயில் தண்டவாளம் போல செயற்படுகிறது. மூளையில் இருந்து அனுப்பப்படும் மின்காந்த(சிக்னல்) சமிக்ஞைகளை முதுகுத் தண்டுவடம் உடலில் மற்ற எல்லா உறுப்புகளுக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. சுவாசத்தை போலவே முதுகுத்தண்டுவட எலும்புகளைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை…..முதுகுத் தண்டுவடம் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பலருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை அது பெரிய மருத்துவ சமாச்சாரம். எனவே நாம் மறந்து போன இந்த இரண்டு விஷயங்களையும் இந்த மகா சிவராத்திரியன்று சதா சதா சுவாசிக்க வேண்டிய இந்த நேரத்தில் சதாசிவ மான சர்வேஸ்வரனை நினைத்து சுவாசித்து ஆன்மீக அறிவியல் ஆற்றலை அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்வோமாக சுவாசியுங்கள் சுவாசியுங்கள் சுவாசத்தை நேசியுங்கள். தொகுப்பு சங்கரமூர்த்தி…7373141119

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சங்கரமூர்த்தி.