கீதா கொலை…! கணவனுக்கு துரோகம்…! காதலன் விட்டு காதலன் தாவல்…!
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியை சேர்ந்தவர் இந்தர்பால். இவர் சிஆர்பிஎப் படையில் ஜவானாக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி கீதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது.
இதில் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் பணிகளுக்காக இந்தர்பால் அங்கு பணியாற்றி கொண்டிருந்தார்..தேர்தல் பணி போட்டதால், அங்கேயே தங்கியும் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 21ம் தேதியன்று, மனைவிக்கு மணிப்பூரில் இருந்து போன் செய்துள்ளார் இந்தர்பால். ஆனால் கீதா போன் எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருந்தும், ரிங் போகிறதே தவிர யாரும் எடுக்கவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த இந்தர்பால் உடனடியாக, அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் அளித்து, வீட்டு முகவரியை கொடுத்து உள்ளார். போலீசார் இந்தர்பால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.அங்கே கீதா வீட்டில் இல்லை என்பது தெரிய வந்தது.
இதை இந்தர்பாலிடம் போலீசார் தெரிவிக்கவும், மீண்டும் அதிர்ச்சி அடைந்த இந்தர்பால் நேரடியாகவே ஊருக்கு கிளம்பி வந்துவிட்டார். மனைவியை தேடி தரும்படி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை நடத்தி வந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கீதாவின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில், கீதாவிடம் முக்தர் என்பவர்தான் கடைசியாக பேசியது தெரியவந்தது.முக்தர் அந்த பகுதியிலேயே கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருபவர். இதையடுத்து, முக்தரை தேடி பிடித்து போலீசார், விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் கீதாவை அவர் கொலை செய்தது தெரியவந்தது. கீதாவின் கள்ளக்காதலன்தான் இந்த முக்தராம். இருவருமே நெருங்கி பழகி வந்த நிலையில், திடீரென கீதா இன்னொரு நபருடன் பழகி வந்துள்ளார்.
இந்த விஷயம் தெரிந்து முக்தர், கீதாவை கண்டித்துள்ளார். ஆனால், கீதா அதை காதிலேயே வாங்கி கொள்ளவில்லை என தெரிகிறது. அதனால் கீதாவை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார் முக்தர்.
சம்பவத்தன்று சமாதானம் பேச காரில் அழைத்து சென்றுள்ளார். அந்த காரில் மேலும் 2 பேர் இருந்து உள்ளார்கள். இவர்கள் எல்லாரும் சேர்ந்துதான், காரிலேயே கீதாவின் கழுத்தை நெரித்து கொன்று, அங்குள்ள கழிவு நீர் தொட்டி ஒன்றில் போட்டுவிட்டு சென்றுள்ளார். இவ்வளவையும் வாக்குமூலமாக முக்தர் தெரிவித்துள்ளதையடுத்து கைதாகி உள்ளார். காரில் கீதாவை கொலை செய்ய உதவிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.