உக்ரைன் தூதர் வலியுறுத்தல்!

உக்ரைனில் கடந்த 24-ந் தேதி ரஷியா தொடுத்துள்ள போரால் அப்பாவி மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை. இதனால் உள்நாட்டு மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். வாகன வசதி இல்லாதவர்கள் கால்நடையாக நடந்து செல்கிற அவலத்தையும் வீடியோக்கள் காட்டுகின்றன.

உக்ரைன் – ரஷியா இடையே போர் நடந்து வருவதால், இருநாட்டு ராணுவத்திலும் உயிரிழப்பு கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், உக்ரைனில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்களை அந்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம், ஐ.நா.,வுக்கான உக்ரைன் துாதர் செர்ஜி கிஸ்லிட்ஸ்யா அறிவுறுத்தி உள்ளார்.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4300-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. 
ரஷிய ராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது. இதுதவிர ரஷிய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.