உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரி பயணம்…!
உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி மந்திரி ஹர்தீப் பூரி ஹங்கேரியில் இருப்பார், விகே சிங் போலந்தில் உள்ள வெளியேற்றும் நடவடிக்கையை மேற்பார்வையிடுவார். ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவாவிலிருந்து வெளியேற்றும் முயற்சிகளை கவனித்துக்கொள்வார், அதே நேரத்தில் கிரண் ரிஜிஜு ஸ்லோவாக்கியாவில் உக்ரைனில் இருந்து நில எல்லைகள் வழியாக வந்த இந்தியர்களை வெளியேற்றுவதை நிர்வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரி புறப்பட்டார். ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இந்தியர்களை மீட்க இன்ஸ்தான்புல் வழியாக ஹங்கேரிக்கு மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி இண்டிகோ விமானம் மூலம் சென்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.