இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….

இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் கடந்த வெள்ளி கிழமை காலை 7 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.  நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் கட்டிடங்கள் லேசாக குலுங்கியுள்ளன.  தொடக்கத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அச்சமடைந்த குடியிருப்புவாசிகள் வீடுகளில் இருந்து தங்களுடைய அன்புக்குரியவர்களை வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.  பலர் தெருக்களில் ஓடி சென்று தஞ்சமடைந்தனர்.  இந்த நிலையில், இந்தோனேசிய நிலநடுக்கத்திற்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன.  இதில், ஞாயிற்று கிழமை வரையில் 10 பேரின் உடக்ள் மீட்கப்பட்டு உள்ளன.  5 பேரை காணவில்லை என தேடுதல் மற்றும் மீட்பு குழுவின் தலைவரான ஆக்டாவியன்டா தெரிவித்து உள்ளார்.  தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட கூடும் மற்றும் சேறு நிறைந்த பகுதியால் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.  நிலச்சரிவு ஏற்பட கூடிய சாத்தியங்களும் உள்ளன என அவர் கூறியுள்ளார்.
எனினும், பசமான் மாவட்டத்தில் மலம்பா கிராமத்தில், 50 மீட்பு பணியாளர்களுடன் மீட்பு பணியானது இன்றும் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.  இதுவரை 15 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.  அவர்கள் 35க்கும் கூடுதலான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  அவசர நிவாரண உதவிகள் நிலநடுக்க பாதிப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.