ஆரோக்கிய வனத்தை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஆரோக்கிய வனம், ஆயுர்வேதத்தில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 215 மூலிகைகள் மற்றும் தாவரங்களை கொண்டுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
சுமார் 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆரோக்கிய வனம் மனித வடிவில் யோகா முத்திரையில் அமர்ந்து இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 215 மூலிகைகளும், தாவரங்களையும் கொண்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.