அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்:ஸ்டாலின் விருப்பம்…
சென்னை: ”மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எந்த பொறுப்பில் இருந்தாலும், உங்களில் ஒருவனாகத்தான் இருப்பேன். வாழ்நாள் முழுதும், உங்களில் ஒருவனாக செயல்படுவேன். நான் பிறந்தபோது குலக் கல்வியை எதிர்த்து போராடினோம். இன்று ‘நீட்’ தேர்வை எதிர்த்து போராடுகிறோம். பள்ளி மாணவனாக இருந்தபோது ஹிந்தியை எதிர்த்தோம்; இன்றும் எதிர்க்கிறோம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.