10 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தி.மு.க.வில் சேர திட்டமா???
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக உருவாக்கப்பட்டு முதன் முறையாக தேர்தலை சந்தித்தது. இந்த மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் 24-யை வென்று தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்று விட்டது. 11 வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் அதில் 10 பேர் திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் தி.மு.க.வுக்கு தாவலாம் என கருத்து நிலவியது. ஆனால் இன்று அவர்கள் சென்னையில் முகாமிட்டிருப்பதாக தெரிகிறது. இவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவரை சந்தித்து அக்கட்சியில் இணைய உள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இது தொடர்பாக உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.