முடிவுக்கு வருகிறதா ரஷ்ய – உக்ரைன் போர்?..மக்கள் சுதந்திரமாக வெளியேற ரஷ்யா அனுமதி
உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் எல்லையில் இன்று 5-வது நாளாக போர் நடந்து வருகிறது. இதனிடையே தலைநகர் கீவ்வில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ராணுவத்திற்கு உக்ரைன் அரசு அறிவுறுத்தி உள்ளது. உக்ரைனில் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை ரஷ்ய ராணுவம் அளித்து தொடர்ந்து அது குறித்த தகவல்களை ரஷ்யா பதிவிட்டு வருகிறது.
மேலும் உக்ரைன் தலைநகர் கைப்பற்றும் முயற்சியில் முனைப்பு காட்டி வருகிறது ரஷ்ய ராணுவம். முழுமையாக அதை கைப்பற்றும் நோக்கில் அதை ஒட்டியுள்ள நகரங்களில் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. 5வது நாளாக நடக்கும் போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 5,300 பேர் வரை இறந்திருக்கலாம்.
ரஷ்யாவின் 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்ட்டர், 191 பீரங்கிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம். போர் விமான தாக்குதல் எச்சரிக்கை நிறுத்தப்பட்டதுடன் ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் ரஷ்யா அறிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.