திருப்பதி தரிசன டிக்கெட் விலை அதிரடி உயர்வு!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு சிபாரிசு கடிதங்கள் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே என்கிறார்கள். அதன்படி ரூ.120க்கு வழங்கப்பட்டு வந்த சுப்ரபாத சேவை டிக்கெட் ரூ.2 ஆயிரமாகவும், கோயிலுக்குள் 45 நிமிடம் அமர்ந்து சுவாமியை தரிசிக்க கூடிய அர்ச்சனை மற்றும் தோமாலை சேவைக்கான ரூ.200 மதிப்புள்ள டிக்கெட் ரூ.5 ஆயிரமாகவும், ரங்கநாயக மண்டபத்தில் வழங்கப்பட்ட வேத ஆசீர்வாத டிக்கெட் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், ரூ.1000 மதிப்புள்ள கல்யாண உற்சவ டிக்கெட் ரூ.2500 ஆகவும், வெள்ளிக்கிழமையில் நடக்கும் வஸ்திரசேவைக்கான ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் ரூ.1 லட்சத்து 2 ஆயிரமாகவும் நிர்ணயித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.