சாலை விபத்தில் மரணம் – இழப்பீட்டு தொகை 8 மடங்காக அதிகரிப்பு!!!

சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயா்த்தப்பட்டு உள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயா்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, 2 லட்சம் ரூபாய் இழப்பீடமாக வழங்கப்பட உள்ளது. சாலை விபத்துகளில் பலத்த காயம் அடைந்தவா்களுக்கு நிவாரணமாக தற்சமயம் வழங்கப்படும் தொகை 12,500 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக உயா்த்தப்படுகிறது. விபத்தில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்படும் தொகை 25,000 ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயா்த்தப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.