கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர் கூட்டம்!
சென்னை: ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டம், கொரானா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு இந்த குறைதீர் கூட்டம் மீண்டும் தொடங்கி நடைபெறும். மேற்படி கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுவதோடு, கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.