உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் ஒன்றிய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!!
உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் ஒன்றிய அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா, மால்டோவா நாடுகளுக்கு செல்கிறார். ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஸ்லோவாக்கியா செல்கிறார். ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கு செல்கிறார். ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் போலாந்து செல்கிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.