4 வயது சிறுவன்.. 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!!!

ராஜஸ்தான் மாநிலம், சிக்கர் பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.பிஜர்னியா கி தானி என்னும் பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.சிறுவனை மீட்கும் பணியில் காவல்துறை, தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.