30 நாட்களில் செலவு கணக்கு…

சென்னை-‘நகர்ப்புற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், செலவு கணக்கை, 30 நாட்களில் ஒப்படைக்க வேண்டும்’ என, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என, 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 19ம் தேதி தேர்தல் நடந்தது.வேட்பாளர்கள், செலவிட்ட தொகைக்கான கணக்கை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. பராமரிக்கப்பட்ட கணக்கின் உண்மை நகலை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்