வி.ஐ.பி. தரிசனத்தில் செல்வோருக்கான ஒரு முக்கிய அறிவிப்பு!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வாரத்தில் 3 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் இலவச தரிசனம், 300 ரூபாய் கட்டணம், வி.ஐ.பி. கட்டண தரிசனம் ஆகியவற்றின் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இலவச தரிசனத்தில் செல்லும்  பக்தர்களுக்கு முன்னுரிைமை அளிக்கும் வகையில் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிபாரிசு கடிதத்தில் ஒதுக்கப்பட்ட வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.