மாடு விடும் விழாவில் பரபரப்பு!!!
பொற்கொடியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 55-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சைனலதாமணி தலைமை தாங்கினார். உதவி ஆணையர் (கலால்) வெங்கட்ராமன் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஒரு மாடு பக்கத்து தெருவில் ஓடி வந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை முட்டி தள்ளி கால்வாயில் தூக்கி வீசிவிட்டு எகிறி குதித்து ஓடியது. இதில் அவர்கள் பைக்குடன் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.