பாக்., ராணுவத்தில் ஹிந்துவுக்கு உயர் பதவி!!!

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் ராணுவத்தில் முதன் முறையாக ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவர் லெப்டினென்ட் கர்னல் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவத்தில் ஹிந்து மதத்தை சேர்ந்த பலர் பணியாற்றுகின்றனர். சிந்து மாகாணம் தார் மாவட்டத்தை சேர்ந்தவர் கெலாஷ் குமார். பாக். ராணுவத்தில் பணியாற்றும் இவர் மிகத் திறமையான அதிகாரி என்ற பெயர் பெற்றவர். ராணுவத்தில் மேஜர் பதவி வகித்து வந்த கெலாஷ் குமாருக்கு லெப்டினென்ட் கர்னலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பாக். ராணுவத்தில் ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவர் உயர் பதவி வகிப்பது இதுவே முதன் முறை என கூறப்படுகிறது. இவர் பாக். ராணுவக் கல்லுாரியில் படித்தவர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.