பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர் !!!!
திமுக வேட்பாளரை தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்த திமுக நிர்வாகிகளுக்கு நன்றி என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி நகராட்சி 20 வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்த திமுகவின் நகர் கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.