நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்???

திருப்பத்தூர் அருகே கழிவறை இன்றி பள்ளி சிறார் சிறுமிகள்  இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்றதால் விபத்துக்குள்ளாகி சிறுமியின் கால் முறிந்துள்ளது. பள்ளியின் கல்வித்தரம் சிறப்பாக இருந்தாலும் 2016-17ம் நிதியாண்டில் 196000 ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கழிவறை சுகாதாரமின்றி தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதால் பள்ளியின் இடைவேளை நேரங்களில் சிறுவர் சிறுமிகள் அனைவரும் கூட்டம் கூட்டமாக பள்ளியின் ஓரமாக உள்ள சாலையை கடந்து இயற்கை உபாதைகளை கழித்து வந்துள்ளனர்.மூன்றாம் வகுப்பு பயின்று வரும் கணபதி மகாலட்சுமி தம்பதியரின் மகள்  திவ்யா ஸ்ரீ மீது மோதியதால் கால்கள் முறிவு  ஏற்பட்டு வாணியம்பாடியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.