தெலுங்கானா விமான விபத்து: தமிழக பயிற்சி விமானி உட்பட இருவர் பலி!!!
பயிற்சியில் இருந்த போது விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். இன்று தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்சியாளர் உட்பட 2 விமானிகள் உயிரிழந்தனர்
விமானம், பிளைடெக் ஏவியேஷன் செஸ்னா 152 ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மச்செர்லாவில் இருந்து புறப்பட்டது. கிருஷ்ணா நதியின் நாகார்ஜுன்சாகர் அணைக்கு அருகில் உள்ள பெத்தவுராவின் துங்கதுர்த்தி கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பலத்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர், ஹெலிகாப்டர் சிதைந்த நிலையில் கிடந்ததுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.