தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்தாச்சு!!!
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் இந்த தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. அனலை கக்கும் வெயிலின் அசுர தாக்கத்தை குறைக்கவும் உடலில் சூட்டை குறைக்கவும் விற்பனைக்கு வர துவங்கி விட்டது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் கடைகளை திறந்து விற்பனைக்கு குவித்து வருகின்றனர். சின்னமனூர் பகுதியில் வாரச்சந்தை பஸ் நிலையம், பாளையம் சாலை, போடி மார்க்கையன்கோட்டை போன்ற சாலையில் தர்பூசணி பழங்கள் மொத்தமாக குவித்து பொதுமக்களுக்கு பீஸ் பீஸாக அறுத்து விற்கப்படுகின்றது. தற்போது தர்பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தர்பூசணி பழங்களின் வருகையால் வெயிலின் தாக்கத்தை ஈஸியாக சமாளிக்கலாம் என பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.