கோவையில் ‘எலக்டிரானிக்ஸ்’ வளர்ச்சி….

கோயமுத்துாரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல சமூகம், தொழில், தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், இம்மண்டலத்திலுள்ள வணிகங்கள் மற்றும் தலைவர்களின் திறன்களை பயன்படுத்தி, முதலீட்டாளர்களை ஈர்க்கவும் ‘கோயமுத்தூர் நெக்ஸ்ட்’ உதவும். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள், பாதுகாப்பு தளவாடங்கள், மருந்து தயாரிப்பு மற்றும் சோலார் சார்ந்த உற்பத்தித் தொழில்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக, சில முக்கிய வளர்ச்சி ஊக்கிகளை இந்த ஆய்வு பட்டியலிட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.