உக்ரைனில் 3 வது நாளாக தொடர் தாக்குதல்….
கியூ: உக்ரைனில் இன்று 3வது நாளாக ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பலத்த சப்தத்துடன் குண்டுகள் வெடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அங்கு வசித்து வரும் இந்தியர்கள் யாரும் அருகில் உள்ள பிற நாட்டு எல்லைக்கு வர வேண்டாம் என மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. இந்திய தூதரகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; போர் சூழல் பெரும் பாதிப்பான சூழல் இருக்கிறது. எனவே இந்தியர்கள் யாரும் அரசு தரப்பு வழிகாட்டுதல் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் கியூ நகரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.