அணு ஆயுதங்களால் பதிலடி ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை
மாஸ்கோ:”ரஷ்யா மீது போர் தொடுப்போருக்கு அணு ஆயுதங்களால் பதிலடி தரப்படும்,” என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டோனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்களின் தன்னாட்சிக்கு, ரஷ்யா அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், உக்ரைன் ராணுவத்திற்கு எதிராகவும் போரிட, ரஷ்ய அதிபர் புடின் நேற்று முன்தினம் ராணுவத்தை அனுப்பி வைத்தார். புடின், உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், உலக நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு அணு ஆயுதம் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.