2011 தேர்தலில் வெற்றியை எதிர்த்த வழக்கை விசாரித்து முடித்து வைக்க முதல்வர் ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை..!!
டெல்லி: 2011 தேர்தலில் வெற்றியை எதிர்த்த வழக்கை விசாரித்து முடித்து வைக்க முதல்வர் ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2011ல் கொளத்தூர் தொகுதியில் வென்றதை எதிர்த்து சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என முதல்வர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பட்டியலிடுவது தொடர்பாக பின்னர் தெரிவிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் அளித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.