வியாபாரிகளை பாதுகாக்க செயலி – நாடார் சங்கத்தலைவர்..

வியாபாரிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய நாடார் பேரவை தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்நாடார் வியாபாரிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் பெண்களை பாதுகாக்க காவல்துறை சார்பில் காவலன் என்ற செயலி அறிமுகப்படுத்தியதை போல வியாபாரிகளை பாதுகாக்க அதே போன்ற ஒரு செயலி உருவாக்கப்பட வேண்டும் என்றும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக மருத்துவர்களை சிலர் மருத்துவமனைகளின் தாக்கும் நிலை ஏற்ப்பட்ட போது அரசு அவர்களை காக்க தனி சட்டம் இயற்றியதைபோல், நாடார் வியாபாரிகளை காக்கவும் ஓர் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.