பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்? – வெளியான அறிவிப்பு

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற பிரபலமான நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’. இதுவரை 5 சீசன்கள் வெளியாகி உள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை கொண்டு பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஓடிடி தளத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது.

கடந்த 20-ந்தேதியன்று கமல்ஹாசன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹாட்ஸ்டார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சிம்பு இடம்பெற்றுள்ள புரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.