பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் கேப்டன்..!??
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
இதனால் பஞ்சாப் அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டனாக பேட்ஸ்மேன் மயங்க் அகர்வாலை நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.