தமிழ்நாட்டில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்த பாஜக!!!
தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என்றிருந்த நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் தாமரை துளிர் விட்டிருப்பது அநேக மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்து இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாரும் எதிர்பாராத வண்ணம் அதிமுக பல இடங்களில் தோல்வியும், பல இளம் பெண்கள், மாணவிகள் வெற்றியும், சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றியும் பெற்றிருந்தனர். அதுமட்டுமின்றி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கமலின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி போன்றவை பல இடங்களில் ஒரு வாக்கு கூட பெறாத சூழலும் இருந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.