சரேல் எர்வீ சதம்..! தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான தொடக்கம்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச், மைதானத்தில் இன்று தொடங்கியது இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தது .

அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக டீன் எல்கர் , சரேல் எர்வீ களமிறங்கினர் .இவர்கள் சிறப்பாக விளையாடி  தொடக்க விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தனர்  .அதன் பிறகு முதல் விக்கெட்டாக கேப்டன் டீன் எல்கர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார் . அதன் பிறகு வந்த மார்க்ரம் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரராக களமிறங்கிய சரேல் எர்வீ சதமடித்தார் .தொடர்ந்து விளையாடிய அவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 238 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது .ராசி வெண்டர் டசன் 13 ரன்களிலும் ,டெம்பா பவுமா 22 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.