மேகதாதுவில் அணைக்கட்ட வலியுறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி மீண்டும் பாதயாத்திரை!!
மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி மீண்டும் பாதயாத்திரை தொடங்க உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.மேகதாதுவி கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி, கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி ராம் நகரில் இருந்து பெங்களூருவை நோக்கி அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை தொடங்கினர். கொரோனா காரணமாகவும், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்தும், ஜனவரி 12ஆம் தேதி பாத யாத்திரை நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததும் மீண்டும் பாதயாத்திரை தொடங்கப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்திருந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.