மூலிகைகளின் சிகரம் வில்வம்!!!

சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின் இலை, பூ, காய், கனி, வேர், பிசின், பட்டை, ஓடு என வில்வத்தின் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. வில்வ வேரை மருத்துவ முறைப்படி எடுத்துக் கொள்ள, பசியின்மை, சுவையின்மை, பெருங்கழிச்சல், விக்கல், பித்த சுரம்(அழல் சுரம்), இடைவிடாத வாந்தி, உடல் இளைத்தல் ஆகியவை நீங்கும். வில்வ வேரைக் கொண்டு செய்யும் வில்வாதித் தைலமானது உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை உடையது.வில்வத்தின் தளிர் இலைகள் எல்லாவகையான மேகநோய்களையும் (பால்வினை நோய்கள்) போக்கும். வில்வப்பூ மந்தத்தைப் போக்கும். மேலும் வாய்துர்நாற்றத்தைப் போக்கி, விஷத்தையும் முறிக்கும் குணம் கொண்டது.மன உளைச்சலால் ஏற்படும் வயிற்றெரிச்சலுக்கு வில்வம் ஒரு சிறந்த மருந்து. இத்தனை சிறப்புகள் வாய்ந்த வில்வத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி நலம் பெறுவோம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.