பார்வையாளர்களை கவர்ந்த ஆணழகன் போட்டி
இந்தியன் பாடி பில்டர்ஸ் அசோசியேசன், புதுச்சேரி பாடி பில்டர்ஸ் மற்றும் பிட்னஸ் இணைந்து 12-வது ஜூனியர் மிஸ்டர் இந்தியா-2022 ஆணழகன் போட்டியை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நடந்தினர். இதில் ஜூனியர் பாடி பில்டர் பிரிவு, மாஸ்டர் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, பெண்கள் பிரிவு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 12 வீராங்கனைகள் உள்பட 252 வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்கள் தங்களது உடல் அமைப்புக்கு ஏற்றவாறு தனித்திறமைகளை வெளிப் படுத்தினர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் (60 கிலோ எடைப்பிரிவில்) சென்னை கொடூங்கையூரை சேர்ந்த சுரேஷ் (வயது30) ஆணழகன் பட்டத்தை வென்றார். இதேபோல் பல்வேறு பிரிவில் ஆணழகன் பட்டத்தை வென்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சிவா, கே.எஸ்.பி. ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி பாடி பில்டர்ஸ் மற்றும் பிட்னஸ் சேர்மன் ரமேஷ்குமார், தலைவர் கணேஷ், செயலாளர் முகுந்தன் மற்றும் நிர்வாகிகள் விக்டர் ஜெகன் நாதன், பழனி, ராமச்சந்திரமூர்த்தி, பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.