நலம் தரும் பேரீச்சை….

உடல் நலத்திற்கு  ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரீச்சம் பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. பேரீச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது. பேரீச்சம் பழத்தின் பயன்கள் பற்றிக் காண்போம்.

*பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

*பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை ரத்தச் சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.

*பேரீச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால் இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

*பேரீச்சம் பழத்தில் கொழுப்புகள் மிகவும் குறைவு. மேலும் இதில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி, புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது.

*பேரீச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி, செரிமான பிரச்னைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

*காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரீச்சம் பழம் அதிகம் துணை புரியும்.

*பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரிப் பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

*மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள், இரவில் படுக்கும்போது பேரீச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து சாப்பிட்டால், இந்தப் பிரச்னையை தவிர்க்கலாம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.