செம்பருத்தி பூ சட்னி!!!
தேவையானவை:
செம்பருத்தி பூ – 20
எண்ணெய் – 4 டீஸ்பூன்
பூண்டு – 4
வெள்ளை எள் – 50 கிராம்
நிலக்கடலை – 50 கிராம்
தக்காளி- 2
புளி – 10 கிராம்
வரமிளகாய் – 5
கடலைப்பருப்பு – 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
கடுகு – அரை சிட்டிகை
மஞ்சள் – ஒரு சிட்டிகை.
பக்குவம்:
அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்னெய் ஊற்றி கடலைப்பருப்பு வரமிளகாய், வெள்ளை எள், நிலக்கடலை, பூண்டு, மஞ்சள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். குறைவான அனலில் வதகினால் சுவை கூடும். அதில் நறுக்கிய தக்காளியை பச்சை வாசனை போக நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இறுதியாக சிறிது புளி சேர்த்து கிளரவும்.
சுத்தம் செய்து வைத்த செம்பருத்திப்பூ இதழ்களை சேர்த்து அதனுடன் உப்பு போட்டு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். அடுப்பை அனைத்த பிறகு செம்பருத்திப் பூ சேர்க்கவும். பூ அதிகம் வதங்கினால் அதன் சத்துக்கள் போய்விடும
.தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.