சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார். கதிர்வேல் வழக்கம்போல் நேற்று(பிப்.23) மருந்து கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சக்திவேல் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.