கோதுமை தேங்காய் பர்பி!!

தேவையானவை:

கோதுமை மாவு – 100 கிராம்,
சர்க்கரை – 150 கிராம்,
தேங்காய்த்துருவல் – 1 கப் (200 கிராம்),
பால் – 200 மிலி,
நெய் – 50 மிலி.

அலங்கரிக்க:

பாதாம்,
முந்திரி – தலா 10,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு கோதுமை மாவை வறுத்துக்கொள்ளவும். பின்பு 2 டீஸ்பூன் நெய் விட்டு தேங்காய்த்துருவலை வறுத்துக்கொள்ளவும். வாணலியில் 200 மிலி பால் விட்டு சர்க்கரை போட்டு, கரைந்ததும் அதில் வறுத்த கோதுமை மாவு, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளறவும். சுருளும்போது நெய் விட்டு இறுகியதும் நெய் தடவிய தட்டில்  கொட்டி துண்டுகள் போடவும். மேலே பாதாம், முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். சுவையான கோதுமை தேங்காய் பர்பி தயார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்