கூடுதல் பஸ் – பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்..
கூடுதல் பஸ்களை இயக்ககோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி செய்து தர கோரி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகின்றது.இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளிக் கல்லூரி மாணவர்கள் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை 9 மணிக்கு சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.