ஏற்பட போகும் பேரழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு! – அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம்

ரஷ்யாவின் போர் முடிவுக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. அமெரிக்க அதிபர் பைடன், “இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான முறையில் பதிலளிப்பார்கள். உலகம் ரஷ்யாவை பொறுப்பேற்க வைக்கும். ரஷ்ய ராணுவப் படைகளின் நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளான உக்ரைன் மக்களுக்கு இன்று இரவு முழு உலகத்தின் பிரார்த்தனைகள் உடன் இருக்கும். அதிபர் புடின் ஒரு பெரும் உயிர் இழப்பு, மனித இனத்துக்கு துன்பத்தை கொண்டு வரும் ஒரு திட்டமிடப்பட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார்” என கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், `நான் இன்று மாலை வெள்ளை மாளிகையில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.