உக்ரைன் உள்ளே புகுந்தது ரஷ்யா.. சீறும் அமெரிக்கா..

 நிலமே எங்கள் உரிமை! ஆம் உக்ரைனை யார் கட்டுப்படுத்துவது என்பதே இந்த மோதலுக்கு காரணம். உக்ரைனும், ரஷ்யாவும் வரலாறுபடி பங்காளிகள். எல்லோரும் சோவியத் யூனியனுக்கு கீழ் ஒன்றாக இருந்தனர். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. ஆனால் அப்போதில் இருந்து உக்ரனை எப்படியாவது தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா முயன்று வருகிறது.

அமெரிக்கா அத்துமீறல்: சரி நல்லா இருக்கும் உக்ரைனை ஏன் ரஷ்யா கைப்பற்ற முயல்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இங்கே அமெரிக்கா மட்டும் சும்மா இல்லை. சோவியத் யூனியனில் இருந்த பல நாடுகளை அமெரிக்கா தனது நேட்டோ படையில் இணைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா சேர்ந்து இப்படி நேட்டோ படைகளில் முன்னாள் சோவியத் நாடுகளை இணைத்து நேட்டோவை விரிவாக்கி உள்ளது. லத்திவியா. லித்துவானியா, ஈஸ்டானியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ஜார்ஜியா உள்ளிட்ட ரஷ்யாவிற்கு அருகே இருக்கும் எல்லைப்புற நாடுகள் எல்லாம் இப்போது நேட்டோ வசம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.