இளநீர் பிரியாணி!!!

என்னென்ன தேவை?

பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசி – 1 கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
உடைத்த முந்திரி,
காய்ந்த திராட்சை – தலா 2 டேபிள்ஸ்பூன்,
இளநீர் – 1 கப்,
ஒன்றிரண்டாக அரைத்த இளநீர் வழுக்கை – 1 கப்,
மில்க்மெய்ட் – 1/4 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?  

வெறும் கடாயில் பாஸ்மதி அரிசியை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் நெய் விட்டு, முந்திரி திராட்சையை வறுத்து தனியே வைக்கவும். குக்கரில் அரிசி, இளநீர், அரைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்ட், உப்பு போட்டு வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: தேவைப்பட்டால் சூடாக இருக்கும்போது பொடித்த சர்க்கரையை சேர்த்து பரிமாறலாம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.