அதிமுகவின் நிலைமை ICU வில் தான் -அதிமுக முன்னாள் நிர்வாகி …
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ராஜினாமா செய்தால் மட்டுமே, ஐ.சி.யூவில் இருக்கும் அதிமுக வெளியே வரும் என அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளார். ஜெயலலிதா சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு, அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர்கள் வரவில்லை என்றாலும், அரசு சார்பில் விழா எடுத்ததற்கு முதலமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.