திண்டுக்கல்லில் கோட்டை விட்ட வாரிசுகள்!!!

திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மகன் வென்றார். முன்னாள் மேயர் மருதராஜ் வாரிசுகள் மூவரும் தோல்வி அடைந்தனர். திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ். இவரது மகன், மகள், தம்பி மகனுக்கும், முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மகனுக்கும் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. வார்டு 8 ல் களமிறங்கிய மருதராஜ் மகன் வீரமார்பன் 1240 ஓட்டுகள் பெற்று தோல்வியுற்றார். அதேவார்டில் தி.மு.க., சார்பில் ஆனந்த் 1554 ஓட்டுகள் பெற்று வென்றார்..

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.