அரசியல் தீர்வுகாண திறந்த நிலையில் உள்ளோம்- ரஷ்யா
உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் நேற்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு காரணமாக, உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில்,உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய பிரதிநிதி வாசிலி நெபென்சியா, பேசுகையில்,
ரஷ்யா அரசியல் தீர்வுகாண திறந்த நிலையில் உள்ளது, ஆனால் “டான்பாஸில் இரத்த ஆறை ” அனுமதிக்காது என்றார்.
டான்பாஸ் என்பது உக்ரைனில் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளைக் குறிக்கிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது உரையில், டான்பாஸில் ரஷ்யர்களுக்கு எதிராக ஒரு போரை கட்டவிழ்த்துவிட உக்ரைன் திட்டமிட்டுள்ளதாகவும், மேற்கு நாடுகளின் உத்தரவின்படி செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், “அமெரிக்கா தலைமையிலான எங்கள் மேற்கத்திய சகாக்கள் ஆற்றிய எதிர்மறையான பங்கைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.”
இவ்வாறு ஐநாவுக்கான ரஷ்ய பிரதிநிதி வாசிலி நெபென்சியா ரஷ்யாவின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.