பிரமாண்ட வெண்கல உருளியில் 1000 லிட்டர் பால் பாயாசம் தயாரிப்பு!!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று. குருவாயூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக பால் பாயாசம் வழங்கப்படும். இதனை கோவில் ஊழியர்கள் உருளியில் தயாரிப்பார்கள். தற்போது பாலக்காட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் கோவிலில் பால் பாயாசம் தயாரிக்க 2 டன் எடையுள்ள பிரமாண்ட வெண்கல உருளியை காணிக்கையாக வழங்கினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.